ஸ்புட்னிக் தடுப்பூசி ஒமைக்ரானுக்கு எதிராகப் போரிடும்: ரஷிய சுகாதாரத் துறை நம்பிக்கை

ஸ்புட்னிக் வி, ஸ்புட்னிக் லைட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸை எதிர்க்கும் திறன் கொண்டிருக்கும் என்று ரஷிய சுகாதாரத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஸ்புட்னிக் வி, ஸ்புட்னிக் லைட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸை எதிர்க்கும் திறன் கொண்டிருக்கும் என்று ரஷிய சுகாதாரத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

மேலும், ஒமைக்ரான் வகை கரோனா வைரஸுக்கு எதிரான புதிய தடுப்பூசி தயாரிக்கும் ஆய்வுப்பணியிலும் இறங்கியுள்ளது. 

உருமாற்றம் அடைந்த 'ஒமைக்ரான்' எனும் கரோனா வகை முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. புதிய வகை கரோனா பரவலைத் தடுக்க அந்தந்த நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மற்ற கரோனா வகைகளைவிட இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு கணித்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில்,  ரஷியாவின் ஸ்புட்னிக் வி, ஸ்புட்னிக் லைட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸை எதிர்க்கும் திறன் கொண்டிருக்கும் என்று ரஷிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

மேலும், புதிய ஒமைக்ரான் வகை கரோனா வைரஸை எதிர்த்துப் போரிடக்கூடிய பூஸ்டர்களைத் தயாரிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளது. 

ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிமிட்ரிவ் இதுகுறித்து கூறுகையில், 

கரோனா உருமாற்றத்திற்கு ஏற்ப, ஸ்புட்னிக் வி, ஸ்புட்னிக் லைட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் தற்போது பயன்பாட்டில் உள்ளன. 

ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கும் கமலேயா நிறுவனம், கரோனா வைரஸ் மாறுபாட்டிற்கு ஏற்ப தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. தற்போது ஒமைக்ரான் வகை கரோனா வைரஸுக்கு எதிரான புதிய ஸ்புட்னிக் தடுப்பூசியை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. 

ஸ்புட்னிக் தடுப்பூசியில் பெரிதாக மாற்றம் தேவைப்படாத நிலையில், 45 நாள்களில் ஒமைக்ரானுக்கு எதிராக பெருமளவில் தடுப்பூசியை உருவாக்க முடியும். மாற்றம் தேவைப்பட்டால், பிப்ரவரி 20, 2022க்குள் ஸ்புட்னிக் பூஸ்டர்களை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com