இந்திய தடுப்பூசி செலுத்தி கொண்ட ஐநா பொதுச் சபை தலைவர்

பிரிட்டன் - ஸ்வீடன் நாட்டு மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனேகா கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்து செய்துவருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளை செலுத்தி கொண்டுள்ளதாக ஐநா பொதுச் சபையின் 76ஆவது தலைவர் அப்துல்லா ஷாகித் தெரிவித்துள்ளார். பிரிட்டன் - ஸ்வீடன் நாட்டு மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனேகா கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்துவருகிறது.

ஐநா பொதுச் சபையின் தலைவராக ஷாகித் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ஏதெனும் கரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டியுள்ளதா? பரிசீலிக்கப்படவுள்ளதா? உலக சுகாதார அமைப்பு ஏதெனும் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கவுள்ளதா? என பல கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய அவர், "தடுப்பூசியை பொறுத்தவரை, மிக தொழில்நுட்பமான கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளேன். இரண்டு தவணைகளையும் போட்டுவிட்டேன்.

எத்தனை நாடுகளில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என எனக்கு தெரியவில்லை. ஆனால், பெரும்பாலான நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசிதான் பயன்படுத்தப்படுகிறது. நான் உயிர் பிழைத்துவிட்டேன். ஆனால், நீங்கள் கேட்ட கேள்விக்கு மருத்துவ நிபுணர்தான் பதிலளிக்க வேண்டும். நான் அல்ல" என்றார். 

மானியமாகவும் வணிக ரீதியாகவும் கோவாக்ஸ் திட்டத்தின் மூலமாகவும் இந்தியா கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு 66 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பெற்று கொண்ட முதல் வெளிநாடு மாலத்தீவுகளாகும். ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாலத்தீவுகளுக்கு கடந்த ஜனவரி மாதம் அனுப்பிவைக்கப்பட்டன. அப்துல்லா ஷாகித்தின் சொந்த நாடு மாலத்தீவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை, மொத்தமாக 3.12 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மாலத்தீவுகள் பெற்றுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டை அங்கீகரிக்க இங்கிலாந்து முதலில் மறுத்துவிட்டது. இருப்பினும், இந்தியாவின் கடும் விமர்சனத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்து செப்டம்பர் 22 அன்று தனது புதிய வழிகாட்டுதல்களைத் திருத்தி, தடுப்பூசியை பட்டியலில் சேர்த்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com