நெருக்கடியில் பிரிட்டன்; உறுதிமொழி அளித்த போரிஸ் ஜான்சன்

இந்த வாரம் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டை பயன்படுத்தி 2019ஆம் ஆண்டு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் கவனம் செலுத்த முடிவெடுத்திருந்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

கரோனாக்கு பிந்தைய உலகம் பெரும் மாறுதலுக்கு உள்ளாகியுள்ளது. பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கரோனாவுக்கு பிந்தைய பிரிட்டனை மாற்றிமைக்க 'மிகப் பெரிய, துணிச்சலான' முடிவுகளை எடுக்கவிருக்கிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

எரிபொருள், எரிவாயு மற்றும் கிறிஸ்துமஸ் உணவு நெருக்கடி ஆகிய விவகாரங்களால் பிரிட்டன் பல்வேறு இடையூறுகளை சந்தித்துவருகிறது. பிராந்திய சமத்துவமின்மை, குற்றங்கள், சமூக பிரச்னைகள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தப்படும் என பிரிட்டனர் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2019ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தார்.

இந்நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாடு இந்த வாரம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை பயன்படுத்தி 2019ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் கவனம் செலுத்த போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதன் காரணமாக போரிஸ் ஜான்சன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

முன்னதாக, பிரெக்ஸிட் ஒப்பந்தம் கையெழுத்தான போது, பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சுதந்திரத்தை நாடு பெற்றுள்ளதாக ஜான்சன் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நிலைமை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. பெட்ரோல் மொத்த விற்பனை விலைகள் உயர்ந்துவரும் நிலையில், எரிவாயு நிறுவனங்கள் அதை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டுவருகின்றன.

கிறிஸ்துமஸ் விலை மாற்றத்தின் காரணமாக பெட்ரோல் பற்றாக்குறை ஏற்பட்டுவிடுமோ என சில்லறை விற்பனையாளர்கள் அச்சப்படுகின்றனர். இதற்கு மத்தியில், கார்களுக்கு பெட்ரோல் போட முடியாமல் தவித்துவருவது மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

மான்செஸ்டர் நகரில் கட்சி மாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தற்போதைய நெருக்கடிகளைக் குறிப்பிடாமல் ஜான்சன் தவிர்த்துவிட்டார். மாறாக, மக்களின் முன்னுரிமைகளில் முக்கியத்துவம் அளித்து சாதனை படைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். "சமூக அக்கறை, வேலைவாய்ப்பு, காலநிலை மாற்றம், குற்றங்களை களைவது போன்று மக்கள் எதற்கு முன்னுரிமை அளிக்கின்றனரோ அதில் மிகப் பெரிய துணிச்சலான முடிவுகளை எடுத்திருக்கிறோம்" என்றும் தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com