இந்திய பயணம்: பிரிட்டன் புதிய அறிவுறுத்தல்

இந்தியா வரும் தங்கள் குடிமக்களுக்கான அறிவுறுத்தல்களை பிரிட்டன் அரசு புதுப்பித்து வெளியிட்டுள்ளது.
இந்திய பயணம்: பிரிட்டன் புதிய அறிவுறுத்தல்

இந்தியா வரும் தங்கள் குடிமக்களுக்கான அறிவுறுத்தல்களை பிரிட்டன் அரசு புதுப்பித்து வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து பிரிட்டன் செல்வோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களாக இருந்தாலும், அவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகக் கருதப்பட்டு அந்நாட்டில் கரோனா பரிசோதனை மேற்கொள்வதும், தனிமைப்படுத்திக் கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி தரும் விதமாக பிரிட்டனை சோ்ந்தவா்கள் இந்தியா வந்தால், அவா்கள் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தாலும் தங்களை கட்டாயம் 10 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, பிரிட்டனை சோ்ந்தவா்கள் இந்தியா வருவதற்கான அறிவுறுத்தல்களை அந்நாட்டு அரசு புதுப்பித்துள்ளது.

அதன்படி பிரிட்டன் குடிமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களாக இருந்தாலும், அவா்கள் இந்தியா வந்தால் இங்குள்ள விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் 10 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியா வந்து சோ்ந்த 8-ஆவது நாளில் மீண்டும் அவா்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பரிசோதனைகளை தங்கள் சொந்த செலவில் மேற்கொள்ளவும் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com