அமெரிக்காவில் கரோனாவால் 7 லட்சம் பேர் பலி

அமெரிக்காவில் கரோனாவால் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 7 லட்சம் பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

உலகளவில் கரோனாவால் பெரிய பாதிப்பை சந்தித்து வரும் அமெரிக்காவில் தொற்றின் தீவிரத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று(அக்-3) கரோனா தொற்றின் காரணமாக 1,100 பலியானதைத் தொடர்ந்து இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 7,01,169 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் உலகில் கரோனாவால் அதிகம் உயிரிழந்தவர்களின் நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 4.45 கோடியாக பதிவாகியிருக்கிறது.

அமெரிக்காவில் தடுப்பூசிகளுக்கு எதிரான குரல்கள் ஒலித்து வந்தாலும் இதுவரை 39.64 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன . இவற்றில் இரண்டு தவணை தடுப்பூசியை 14.6 கோடி பேர் எடுத்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com