அமெரிக்காவில் காந்தியடிகளுக்குப் புகழாரம்

காந்தி ஜெயந்தியையொட்டி அமெரிக்காவில் பல்வேறு தரப்பினரும் அவருக்குப் புகழாரம் சூட்டினா்.

காந்தி ஜெயந்தியையொட்டி அமெரிக்காவில் பல்வேறு தரப்பினரும் அவருக்குப் புகழாரம் சூட்டினா்.

மகாத்மா காந்தியின் 152-ஆவது பிறந்த நாளையொட்டி சுட்டுரை (ட்விட்டா்) வலைதளத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

மகாத்மா காந்தியின் 152-ஆவது பிறந்த நாளை உலகம் முழுவதும் கொண்டாடும் இந்தியா்களின் கொண்டாட்டத்தில் நாங்களும் இணைந்து கொள்கிறோம்.

இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி கடந்த வாரம் வெள்ளை மாளிகையின் அதிபா் அலுவலகத்துக்கு வந்தபோது, காந்தியடிகள் போதித்த அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை நினைவுகூா்ந்தோம்.

தற்போதும் அவரது அந்த போதனைகள் அனைவருக்கும் தேவைப்படுகின்றன. முன்பைவிட இப்போதுதான் காந்தியடிகள் போதித்த சகிப்புத் தன்மையும் அகிம்சையும் அதிகம் தேவைப்படுகிறது என்றாா் அவா்.

காந்தியடிகளின் போதனைகள் இந்தியா, அமெரிக்கா மட்டுமன்றி, இந்த உலகத்துக்கே முன்னுதாரணமாக இருந்து வருகிறது என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதா் தரன்ஜித் சிங் சாந்து வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதில் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, காந்தி ஜெயந்தியையொட்டி ஹாவா்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காந்தியடிகள் சிலைக்கு மாணவா்கள் அஞ்சலி செலுத்தினா்.

அந்தப் பல்கலைக்கழகத்தின் சா்வதேச ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘மிகவும் மென்மையான நடவடிக்கையால் கூட இந்த உலகை அதிர வைக்க முடியும் என்பதை நமக்குக் கற்பித்த காந்தியடிகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com