6 மணி நேர முடக்கம் - ரூ.600 கோடியை இழந்த மார்க் ஸக்கர்பெர்க்

வாட்ஸ் ஆப் , ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று(அக்-4) இரவு உலகம் முழுவதும் 6 மணி நேரத்திற்கு மேல் செயல்படாமல் முடங்கியதால் அதன் உரிமையாளர் மார்க் ஸக்கர்பெர்க் 600 கோடியை இழந்திருக்கிறார்
6 மணி நேர முடக்கம் - ரூ.600 கோடியை இழந்த மார்க் ஸக்கர்பெர்க்
6 மணி நேர முடக்கம் - ரூ.600 கோடியை இழந்த மார்க் ஸக்கர்பெர்க்

வாட்ஸ் ஆப் , ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று(அக்-4) இரவு உலகம் முழுவதும் 6 மணி நேரத்திற்கு மேல் செயல்படாமல் முடங்கியதால் அதன் உரிமையாளர் மார்க் ஸக்கர்பெர்க் 600 கோடியை இழந்திருக்கிறார்.

உலகில் அதிகப் பயனாளர்களைக் கொண்ட செயலிகளில் வாட்ஸ் ஆப் , ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை தவிர்க்க முடியாத சமூக வலைதளங்களாக மாறியிருக்கின்றன.

இந்நிலையில் நேற்று(அக்-4) இரவு திடீரென இந்த செயலிகள் உலகம் முழுவதும் முடங்கியது. ஒரே நேரத்தில் இவை மூன்றும் செயல்படாததால் பல கோடிப் பயனாளர்கள் திணற ஆரம்பித்தனர்.

பின் தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்த பின் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தன்னுடைய பக்கத்தில் ‘  வாட்ஸ் ஆப் , ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டன. தடங்களுக்காக வருந்துகிறேன். எங்கள் சேவையை எவ்வளவு நம்பியிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொண்டேன்’ எனக் கூறியிருக்கிறார்.

இருப்பினும் 6 மணி நேரம் ஃபேஸ்புக் இயங்காததற்கு பங்குச்சந்தையில் அதன் மதிப்பு 5 சதவீதம் குறைந்தது. இதனால் 600 கோடி வருவாயை மார்க் ஸக்கர்பெர்க் இழந்திருக்கிறார்.

மேலும் மார்க் சொத்து மதிப்பில் 52 ஆயிரம் கோடி குறைந்ததால்  உலக பணக்காரர் பட்டியலில் 3-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com