அமெரிக்க, சீன அதிபர்களுக்கிடையே நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு

அமெரிக்கா, சீனா நாடுகளின் அதிபர்கள் இந்த ஆண்டு இறுதியில் காணொலி வாயிலாகச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் பைடன் இந்த ஆண்டு இறுதியில் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காணொலி காட்சி மூலம் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. காணொலி மூலம் இரு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அரசு உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அந்த அலுலவர் மேலும் கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளாகவே சீன அதிபர் ஷி ஜின்பிங் சர்வதேச தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. எனவே, இந்த சந்திப்பு காணொலி மூலம் நடைபெற்றாலும் கூட முக்கியமான ஒன்றாகவே கருதுகிறோம்" என்றார். 

இந்த மாதம் ரோமில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஜி ஜின்பிங் கலந்து கொண்டிருந்தால், அங்கேயே அதிபர் பைடன், ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றிருக்கும். அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் சீனாவின் உயர்மட்ட தூதர் ஒருவரை சுவிட்சர்லாந்தில் சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார். 

இந்த சந்திப்பு முடிந்த சில மணி நேரத்திலேயே அமெரிக்க, சீன அதிபர்களின் சந்திப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவிவரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

ஒரு புறம் தைவானை முழுமையாகத் தனது நாட்டுடன் இணைக்கும் முயற்சிகளைச் சீனா தீவிரப்படுத்துகிறது. மறுபுறம் அமெரிக்கா அணு ஆயுத ஆற்றல் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு விற்றுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com