ஆட்சியை பலவீனப்படுத்தும் வகையில் எதுவும் செய்யக்கூடாது: அமெரிக்காவுக்கு தலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்கானின் பிரச்னைகள் குறித்து அமெரிக்கா உள்பட பல நாடுகளுடன் ஆலோசிக்கப்படும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிதை அடுத்து, முதல்முறையாக தலிபான், அமெரிக்கா இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், ஆட்சியை பலவீனப்படுத்தும் வகையில் எதுவும் செய்யக்கூடாது என அமெரிக்காவை எச்சரித்ததாக ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆமிர் கான் முட்டாகி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க படைகளால் தலிபான்கள் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு மீண்டும் ஆட்சி அமைத்துள்ள தலிபான்கள் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முட்டாகி இதுகுறித்து விரிவாக பேசுகையில், "ஆப்கானிஸ்தானில் அரசை சீர்குலைக்க முயற்சிப்பது யாருக்கும் நல்லதல்ல என்று நாங்கள் அவர்களிடம் தெளிவாக கூறினோம்.

ஆப்கானிஸ்தானுடனான நல்லுறவே அனைவருக்கும் நல்லது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் அரசை வலுவிழக்கச் செய்ய எதுவும் செய்யக்கூடாது. அது மக்களுக்குப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஆப்கானிஸ்தானில் கரோனா தடுப்பூசி போட அமெரிக்கா உதவும். ஆப்கன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க அமெரிக்காவிலிருந்து வந்த பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மிகவும் கடினமான காலத்தை கடந்து செல்லும் நிலையில், பொறுமையாக இருந்து அமெரிக்கா நல்ல உறவை பேணி காக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆப்கானிஸ்தான் இந்த பிரச்னையிலிருந்து அதிக பலத்துடன் வெளியே வரும்" என்றார்.

இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சார்பில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சிறப்பு துணை பிரிதிநிதி டாம் வெஸ்ட், அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி முகமை அலுவலர் சாரா சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க எந்த கருத்தும் இன்னும் தெரிவிக்கவில்லை.

ஆட்சியை உறுதிப்படுத்த தலிபான்கள் பல முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், வெள்ளிக்கிழமை ஷியா பிரிவு மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்திருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டிவெடிப்புக்கு ஐஎஸ் கோரசான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com