இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்!

பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களின் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்-பெண் சமத்துவம், பெண்களின் வளர்ச்சியை வலியறுத்தும் விதமாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

அக்.11 சர்வதேச பெண் குழந்தைகள் தினம்! 

1995 ஆம் ஆண்டில், பல்வேறு பிரச்னைகளால் பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டு, பெய்ஜிங்கில் நடந்த பெண்களுக்கான உலக மாநாட்டில், பெண் குழந்தைகளுக்காகவும் பெண்களுக்காகவும் ஒரு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்னைகள் குறித்து இதில் பேசப்பட்டது. 

அப்போது, அக்டோபர் 11 ஆம் தேதியை பெண் குழந்தைகள் தினமாக அறிவிப்பதற்கான தீர்மானம், ஐ.நா.சபையால் டிசம்பர் 19, 2011 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களின் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்-பெண் சமத்துவம் மற்றும் பெண்களின் வளர்ச்சியை வலியறுத்தும் விதமாக கடந்த 2012 முதல் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

பாலின பாகுபாடின்றி பெண் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம், கற்றல் வசதிகள், இளம்பெண்ககள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு, திறமை அடிப்படையில் அதிகாரமளித்தல், அனைத்துத் துறைகளிலும் சம வாய்ப்பு வழங்குதல், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறைத்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவை ஐ.நா.வால் வலியுறுத்தப்படுகின்றன. 

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளுடன்   கொண்டாடப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு பெண் குழந்தை நாளுக்கான கருப்பொருள் 'எண்ம தலைமுறை; நம் தலைமுறை'(Digital generation'. Our generation). 

பெண்கள் பல்வேறு வழிகளில் எண்ம வழிமுறைகளை அறிந்து தொழில்நுட்ப வல்லுநர்களாக சிறந்து விளங்கவும் கருத்துச் சுதந்திரம், மகிழ்ச்சியுடன் இருக்கவும், இந்த தலைமுறை பெண்கள், இனம், பாலினம், மொழி, திறன், பொருளாதார நிலை மற்றும் புவியியல் தோற்றம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அவர்களின் முழு திறனையும் விரிவுபடுத்த தொழில்நுட்ப வழிகளின் பன்முகத்தன்மையை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 

உலகளவில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் மக்கள்தொகை 48%.  உலகளவில் 15-19 வயதுக்குள்பட்ட 4ல் ஒரு பெண்ணுக்கு கல்வியோ, வேலைவாய்ப்போ கிடைப்பதில்லை. ஆனால், ஆண்களில் 10ல் ஒருவருக்கே இந்த நிலை இருக்கிறது. எனவே, ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளுக்கும் வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. 

இதுதவிர, பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் வளர்ச்சி மேம்பாட்டு வந்தாலும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை. 

தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அனைத்துத் துறைகளிலும் சமவாய்ப்பு வழங்குவதுடன் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைக்கப்பட சட்டங்களை வலுவாக்க வேண்டும் என்பதும் ஒரு பொதுவான கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com