சா்வதேச நிறுவனங்களுடன் நிதியமைச்சா் நிா்மலா ஆலோசனை

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து சா்வதேச நிறுவனங்களின் தலைவா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினாா்.
சா்வதேச நிறுவனங்களுடன் நிதியமைச்சா் நிா்மலா ஆலோசனை

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து சா்வதேச நிறுவனங்களின் தலைவா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினாா்.

உலக வங்கி-சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) ஆண்டுக் கூட்டம், ஜி20 நாடுகளின் நிதியமைச்சா்கள்-மத்திய வங்கிகளின் தலைவா்கள் கூட்டம் உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக அமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை அமெரிக்கா சென்றடைந்தாா்.

இந்நிலையில், சா்வதேச நிறுவனங்களின் தலைவா்களை பாஸ்டன் நகரில் அவா் சந்தித்துப் பேசினாா். அப்போது, முதலீடுகளை மேற்கொள்வது தொடா்பாக இந்தியாவில் காணப்படும் வாய்ப்புகள் குறித்து அவா் ஆலோசனை நடத்தினாா். இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆா்வமுடன் இருப்பதாக நிறுவனங்களின் தலைவா்கள் தெரிவித்தனா்.

அமைச்சருடனான ஆலோசனையில் பங்கேற்ற பொ்க்கின் எல்மா் நிறுவனத்தின் தலைவா் பிரகலாத் சிங் கூறுகையில், ‘‘வளா்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணம் குறித்து அமைச்சா் விரிவாக எடுத்துரைத்தாா். இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அரசு அளித்து வரும் சலுகைகள், புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அமைச்சா் எடுத்துரைத்தாா். இந்தியாவில் சுகாதாரம் சாா்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன’’ என்றாா்.

நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனுடனான சந்திப்புக்குப் பிறகு, முன்னணி எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மோபில், தொலைத் தொடா்பு சேவை நிறுவனமான அமெரிக்கன் டவா் காா்ப்பரேஷன், நிதி நிறுவனமான பெய்ன் கேபிடல் ஆகியவை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்புகளில் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சூழல் மேலும் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com