பால்வெளி மண்டலத்திலிருந்து வந்த ரேடியோ சமிக்ஞைகள்: ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்

பால்வெளி மண்டலத்திலிருந்து ரேடியோ அலை சமிக்ஞைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பால்வெளி மண்டலத்திலிருந்து வந்த ரேடியோ சமிக்ஞைகள்: ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்
பால்வெளி மண்டலத்திலிருந்து வந்த ரேடியோ சமிக்ஞைகள்: ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்

பால்வெளி மண்டலத்திலிருந்து ரேடியோ அலை சமிக்ஞைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பால்வெளி மண்டலத்தில் நமது சூரியக் குடும்பமும், நட்சத்திரங்களும், விண்கற்களும் உள்ளன. தற்போதைய கண்டுபிடிப்புகளின்படி சூரியக் குடும்பத்தில் மட்டும் உயிரினங்கள் வாழ்ந்துவரும் நிலையில் இதர கோள்களிலும், பால்வெளி மண்டலம் மற்றும் அதனைக் கடந்த வான்வெளியில் உயிரினங்கள் உள்ளனவா என விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பால்வெளி மண்டலத்தின் மத்தியில் இருந்து ரேடியோ அலை சமிக்ஞைகள் வந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறைந்த அதிர்வெண் கொண்ட இந்த ரேடியோ அலைகள் நீண்ட தொலைவில் இருந்து வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பெஞ்சமின் போப் மற்றும் டஞ்சு தேசிய விண்வெளி ஆய்வகம் இணைந்து இந்த ரேடியோ சமிக்ஞைகளைக் கண்டறிந்துள்ளனர்.

19 தொலைதூர சிவப்பு குறுங்கோள்களிடமிருந்து சமிக்ஞைகள் வந்துள்ளதாகத் தெரிவித்த விஞ்ஞானிகள் குறைந்த அதிர்வெண் பகுப்பாய்வி மூலம் அதனைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 

இந்த ரேடியோ அலைகளை ஆய்வு செய்வதன்மூலம் கோள்களின் காந்தப்புலம் மற்றும் கோள்களின் இருப்பு உள்ளிட்டவற்றை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com