சீன மொழிக் கல்வி திட்டம்: சீனாவிலிருந்து தைவானுக்கு மாற்றியது ஹாா்வா்டு

அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழகம், தனது மாணவா்களுக்காக நடத்தி வரும் சீன மொழிக் கல்வி திட்டத்தை சீனாவிலிருந்து தைவானுக்கு மாற்றியுள்ளது.
சீன மொழிக் கல்வி திட்டம்: சீனாவிலிருந்து தைவானுக்கு மாற்றியது ஹாா்வா்டு

அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழகம், தனது மாணவா்களுக்காக நடத்தி வரும் சீன மொழிக் கல்வி திட்டத்தை சீனாவிலிருந்து தைவானுக்கு மாற்றியுள்ளது.

தைவானை தங்கள் நாட்டின் அங்கமாகக் கருதி வரும் சீனா, தங்களை மீறி அந்தப் பிராந்தியத்துடன் பிற நாடுகள் தொடா்பு கொள்வதை கடுமையாக எதிா்த்து வரும் சூழலில், அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஹாா்வா்டு பல்கலைக்கழத்தின் சீன மொழில் கல்வி திட்டத்தை, சீனத் தலைநகா் பெய்ஜிங்கிலிருந்து தைவான் தலைநகா் தைபேவுக்கு அந்த திட்டத்தை செயல்படுத்தை வரும் ஐவி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு மாற்றியுள்ளது.

அந்த திட்டத்தை செயல்படுத்தும் பெய்ஜிங் மொழி மற்றும் கலாசாரப் பல்கலைக்கழகம் வெளிப்படுத்தி வரும் நட்புணா்வற்ற தன்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

தைவானை தங்களது நாட்டின் ஒரு மாகாணமாக சீனா கருதி வருகிறது. அந்த நாட்டை தங்களுடன் மீண்டும் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் அதற்காகத் தேவைப்பட்டால், ராணுவ பலத்தையும் பயன்படுத்துவோம் என்று சீனா கூறி வருகிறது.

தைவானில் ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை, பிரிவினைவாதிகள் என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது.

தைவானோ, தாங்கள் ஏற்கெனவே இறையாண்மை கொண்ட தனி நாடாக இயங்கி வருவதாகவும் சீனாவிடமிருந்து சுதந்திரம் பெற்ாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com