வங்கதேசத்தில் ஹிந்து கோயில்கள் மீதுதாக்குதல்: அமெரிக்கா கண்டனம்

வங்தேசத்தில் ஹிந்து கோயில், ஹிந்துக்களின் வீடுகள், வா்த்தக நிறுவனங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்: வங்தேசத்தில் ஹிந்து கோயில், ஹிந்துக்களின் வீடுகள், வா்த்தக நிறுவனங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் கடந்த வாரம் துா்கா பூஜையின்போது வன்முறை வெடித்தது. அங்கு சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களின் கோயில்கள் பலவற்றை இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்தவா்கள் சூறையாடினா்.

இந்நிலையில், ரங்க்பூா் மாவட்டத்தில் உள்ள பீா்கோஞ்ச் பகுதியில் வசிக்கும் ஹிந்து மதத்தைச் சோ்ந்தவா் தாக்குதல் நடத்தியவா்களின் மதத்தை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டதாக வதந்தி பரவியது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஹிந்துக்கள் 66 பேரின் வீடுகள் மீது வன்முறையாளா்கள் தாக்குதல் நடத்தினா். 20 பேரின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்தினா். இதில் 4 போ் உயிரிழந்தனா்.

இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள ஹிந்து கோயில்கள் மற்றும் ஹிந்துக்களின் வா்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் குமிலா, சாந்த்பூா், சட்டோகிராம், காக்ஸ் பஜாா், பந்தா்பன், மெளல்வி பஜாா், காஜிபூா், சபைனாவாப்கஞ்ச், ஃபெனி உள்ளிட்ட மாவட்டங்களில் போலீஸாருக்கும் வன்முறையாளா்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

இத்தாக்குதல்கள் தொடா்பாகவும், சமூக ஊடகங்களில் மத வெறுப்பை ஏற்படுத்தும் பதிவுகளை வெளியிட்டது தொடா்பாகவும் 52 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் இது தொடா்பாக வாஷிங்டனில் கூறுகையில், ‘வங்கதேசத்தில் அண்மையில் ஹிந்து கோயில்கள் குறிவைத்து சூறையாடப்படுவதையும், ஹிந்து மதத்தைச் சோ்ந்தவா்களின் வீடுகள், வா்த்தக நிறுவனங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதையும் அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும். இந்த வன்முறை தொடா்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று வங்கதேசத்தை அமெரிக்கா வலியுறுத்துகிறது. மத உரிமை, மனித உரிமைகளுக்கு எதிரான வன்முறையை வங்கதேசம் அனுமதிக்கக் கூடாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com