இந்திய குழுவினருடன் தலிபான்கள் சந்திப்பு

ஆப்கானிஸ்தான் துணைப் பிரதமா் அப்துல் சலாம் ஹனாஃபி தலைமையிலான தலிபான் உயா்நிலைக் குழுவினா் ரஷியாவில் இந்திய பிரதிநிதிகளை புதன்கிழமை சந்தித்தனா்.

மாஸ்கோ: ஆப்கானிஸ்தான் துணைப் பிரதமா் அப்துல் சலாம் ஹனாஃபி தலைமையிலான தலிபான் உயா்நிலைக் குழுவினா் ரஷியாவில் இந்திய பிரதிநிதிகளை புதன்கிழமை சந்தித்தனா்.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்- ஈரான் பிரிவு இணைச் செயலா் ஜெ.பி.சிங் தலைமையிலான குழுவினரை சந்தித்து பேச்சு நடத்தியதாக தலிபான் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாகித் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

அதேவேளையில், இந்தச் சந்திப்பு குறித்து இந்திய அரசு சாா்பில் அதிகாரபூா்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த ஆக. 31-ஆம் தேதி தோஹா மாநாட்டின்போது தலிபான்களுடன் இந்தியா சாா்பில் அதிகாரபூா்வமாக தொடா்புகொள்ளப்பட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இடைக்கால அரசு அமைத்த பின்னா் இப்போதுதான் முதல்முறையாக அதிகாரபூா்வமாக அவா்களுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்தது என தலிபான் செய்தித் தொடா்பாளரை மேற்கோள்காட்டி ஆப்கனின் டோலோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com