ரஷியா: கரோனாவால் 80 லட்சம் பேர் பாதிப்பு

ரஷியாவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ரஷியாவில்  இதுவரை 80 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .

நேற்று (அக்-21) வியாழக்கிழமை நிலவரப்படி புதிதாக 49,945 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 80 லட்சமாக உயர்ந்திருக்கிறது.  இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 2.26 லட்சமாகவும் பதிவாகியிருக்கிறது.

அந்நாட்டில் அதிகபட்சமாக தலைநகர் மாஸ்கோவில் 4.91 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் ரஷியாவில் 5.19 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.அதில் 4.7 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com