ஆப்கனுக்கு ரூ.7.49 கோடி நிதி வழங்கியது சீனா

ஆப்கானிஸ்தானுக்கு முதல்கட்டமாக ரூ. 7.49 கோடி நிதியுதவை சீனா வழங்கியதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
ஜபிஹுல்லா முஜாஹித்
ஜபிஹுல்லா முஜாஹித்

ஆப்கானிஸ்தானுக்கு முதல்கட்டமாக ரூ. 7.49 கோடி நிதியுதவை சீனா வழங்கியதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க படைகள் ஆகஸ்ட் மாதம் திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

தலிபான்களின் புதிய ஆட்சிக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையே பல்வேறு நாடுகளிலிருந்து ஆப்கனுக்கு வழங்கப்பட்ட உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர் என அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சீன அரசு சார்பில் முதல்கட்டமாக ரூ.7.49 கோடி மதிப்பிலான உதவிகள் கிடைத்துள்ளதாகவும், விரைவில் ரூ. 37.45 கோடி மதிப்பிலான உணவு, மருந்துகள் உள்ளிட்டவை அனுப்ப உறுதி அளித்துள்ளதாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் டோலோ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com