புதிதாக 35 பேருக்கு கரோனா: சீனாவின் கன்சு மாகாணத்தில் சுற்றுலாத் தலங்கள் மூடல்

சீனாவில் புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கன்சு மாகாணத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் திங்கள்கிழமை மூடப்பட்டன.

சீனாவில் புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கன்சு மாகாணத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் திங்கள்கிழமை மூடப்பட்டன.

புத்தரின் உருவச் சிலைகள், ஓவியங்கள் நிறைந்த டன்குவாங் கோட்டை மற்றும் பிற மதத் தலங்கள் அதிகம் கொண்ட மாகாணம் ஹன்சு. வடமேற்கு மாகாணமான ஹன்சு, சுற்றுலாவுக்குப் பெயா் பெற்ாகும். நாட்டில் இங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் 4 போ் ஹன்சுவை சோ்ந்தவா்கள். இதையடுத்து, அந்த மாகாணத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

உள்ளூரில் பரவும் கரோனா தொற்றை சீனா பெருமளவில் கட்டுப்படுத்திவிட்டாலும், புதிதாக சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டாலும் பொதுமுடக்கம், தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, தலைநகா் பெய்ஜிங்கில் 21 பேருக்கு டெல்டா வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சாங்பிங் மாவட்டத்தில் ஒரு குடியிருப்பு பகுதியை நடுத்தர அபாய பகுதியாகவும், மற்றொரு பகுதியை அதிக அபாய பகுதியாகவும் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com