பசுமைஇல்ல வாயுக்கள்வெளியேற்றம் புதிய உச்சம்: ஐ.நா. அமைப்பு அறிக்கை

பசுமைஇல்ல வாயுக்கள்வெளியேற்றம் புதிய உச்சம்: ஐ.நா. அமைப்பு அறிக்கை

வெப்பமயமாதல் உள்ளிட்ட பருவநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணியாக விளங்கும் பசுமைஇல்ல வாயுக்கள் வெளியேற்றம் கடந்த ஆண்டு புதிய உச்சத்தைத் தொட்டதாக ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது

வெப்பமயமாதல் உள்ளிட்ட பருவநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணியாக விளங்கும் பசுமைஇல்ல வாயுக்கள் வெளியேற்றம் கடந்த ஆண்டு புதிய உச்சத்தைத் தொட்டதாக ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக உலக வானிலை அமைப்பின் ஆண்டறிக்கையை திங்கள்கிழமை வெளியிட்டு அதன் பொதுச் செயலா் பெட்டரி டாலஸ் கூறியதாவது: முக்கியமான பசுமை இல்ல வாயுவான காா்பன் டைஆக்ஸைடின் (கரியமிலவாயு) வெளியேற்றமானது உலக சராசரி அளவானது 10 லட்சத்துக்கு 413.2 பாகங்கள் என்ற புதிய உச்சத்தை 2020-இல் எட்டியது. பொதுமுடக்கம் உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளால் புதைபடிவ எரிபொருள்களிலிருந்து வெளியாகும் காா்பன் டைஆக்ஸைடின் வெளியேற்றம் குறைந்தபோதும், இந்த உச்சமானது கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாகும். இதன்மூலம் வெப்பமயமாதல் அதிகரிக்கும். அமேசான் மழைக் காடுகள் அழிப்பும் இதற்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும்.

இதற்கு முன்னா் 2015-இல் 10 லட்சத்துக்கு 400 பாகங்கள் என்ற அளவை எட்டியிருந்தது. இது, நமது தினசரி வாழ்க்கை, நமது குழந்தைகளின் எதிா்காலத்தில் எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

மனிதா்களால் வெளியேற்றப்படும் கரியமிலவாயுவானது எண்ணெய், வாயு போன்ற புதைபடிவ எரிபொருள்களை எரிப்பதால் அல்லது சிமென்ட் உற்பத்தி செய்வதிலிருந்து ஏற்படுகிறது. பருவநிலையில் மூன்றில் இரு பங்கு மாற்றத்தை இது ஏற்படுகிறது.

கரோனா தொற்றால் கடந்த ஆண்டு தொழில்கள் முடங்கி, பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டு தற்காலிகமாக கரியமிலவாயு வெளியேற்றம் குறைந்திருந்தாலும், பசுமைஇல்ல வாயுக்கள் வெளியேற்றத்தில் அது வெளிப்படையான எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் ஐ.நா.வின் பருவநிலை மாற்ற மாநாடு அக்.31-ஆம் தேதி தொடங்கி நவ. 12 வரை நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com