ஆப்பிள் நிறுவனத்தை முந்திய மைக்ரோசாப்ட்; எதில் தெரியுமா?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் 4.2 சதவிகிதம் உயர்ந்து 323.17 அமெரிக்க டாலர்களாக விற்பனையான நிலையில், அதன் சந்தை மதிப்பு 2.426 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்திருப்பதன் மூலம் உலகின் மிக விலை மதிப்புமிக்க நிறுவனமாக அது மாறியுள்ளது. இதன் காரணமாக, ஆப்பிள் நிறுவனத்தை அது பின்னுக்கு தள்ளியுள்ளது. காலாண்டு சந்தை மதிப்பு முடிவுகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், இது தெரிய வந்துள்ளது.

அஸூர் கிளவுட் கம்ப்யூட்டிங் (தரவு நிர்வாக மையம்) வணிகத்தின் காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வளர்ச்சி கண்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் 4.2 சதவிகிதம் உயர்ந்து 323.17 அமெரிக்க டாலர்களாக விற்பனையான நிலையில், அதன் சந்தை மதிப்பு 2.426 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.461 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு வெளியாகவிருந்த நிலையில், அதன் பங்குகள் 0.3 சதவிகிதம் குறைந்தது. சந்தையில் ஐபோன்களின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆப்பிள் நிறுவனத்திற்கு உலக விநியோக சங்கிலி பெரும் சவால் விடுத்துவருவதை முதலீட்டாளர்கள் தொடர்ந்து கவனித்துவந்தனர். இந்த பின்னணியில்தான், அதன் பங்குகள் குறைந்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் சேவை சார்ந்த விற்பனையின் தேவை கரோனா காரணமாக அதிகரித்ததால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் இந்தாண்டு 45 சதவிகிதம் அதிகரித்தது. அதேபோல், ஆப்பிளின் பங்குகள் 12 சதவிகிதம் மட்டுமே ஏற்றம் கண்டன. கடந்த 2010ஆம் ஆண்டு, சந்தை மதிப்பில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆப்பிள் பின்னுக்கு தள்ளியது. 

இதன் மூலம், உலகின் முதன்மையான நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமாக ஆப்பிள் உருவெடுத்தது. நியூயார்க் பங்குச் சந்தையில் மிக விலை மதிப்பு மிக்க நிறுவனமாக மைக்ரோசாப்ட், ஆப்பிள் நிறுவனங்கள் மாறி மாறி இருந்துள்ளன. 2020ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து, விலை மதிப்பு மிக்க நிறுவனமாக ஆப்பிள் இருந்துவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com