மாஸ்கோவில் நவ. 7 வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி

ரஷியாவில் கரோனா பலி அதிகரித்து வருவதை அடுத்து, தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. 
மாஸ்கோவில் நவ. 7 வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி

ரஷியாவில் கரோனா பலி அதிகரித்து வருவதை அடுத்து, தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

மாஸ்கோவில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. மற்றபடி சில்லறை விற்பனைக் கடைகள், பள்ளிகள், உணவகங்கள் அனைத்தும் 11 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளன.

அதன்படி நவம்பர் 7 ஆம் தேதி வரை விளையாட்டு சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், பள்ளிகள், மழலையர் பள்ளிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்டவை செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், மருந்தகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ரஷியாவில் ஒட்டுமொத்தமாக 32% மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 

கட்டுப்பாடுகளையொட்டி, வெளியே பொது இடங்களுக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ரஷியாவில் புதிதாக 40,096 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒருநாள் பாதிப்பு 36,582 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,159 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய பலி 1,123 ஆக இருந்தது. கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின ஒட்டுமொத்த எண்ணிக்கை 2,35,057-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com