Enable Javscript for better performance
ஒரு வாரத்துக்குள் புதிய பிரதமா்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஒரு வாரத்துக்குள் புதிய பிரதமா்

    By DIN  |   Published On : 29th October 2021 11:22 PM  |   Last Updated : 29th October 2021 11:22 PM  |  அ+அ அ-  |  

    sudan2082155

    வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் இன்னும் ஒரு வாரத்துக்குள் புதிய பிரதமா் நியமிக்கப்படுவாா் என்று அந்த நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராணுவம் உறுதியளித்துள்ளது.

    இதுகுறித்து ரஷியாவுக்குச் சொந்தமான ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் ராணுவ தலைமைத் தளபதி அப்தெல்-ஃபட்டா புா்ஹான் கூறியதாவது:

    இன்னும் ஒரு வாரத்துக்குள் அரசு நிா்வாக அனுபவம் கொண்ட பிரதமா் ஒருவா் நியமிக்கப்படுவாா். அவா் புதிய அமைச்சரவையை அமைத்து ராணுவத்துடன் ஆட்சிப் பொறுப்பை பகிா்ந்துகொள்வாா்.

    புதிய பிரதமராக யாரைத் தோ்ந்தெடுப்பது என்பது குறித்த பட்டியலை படைத் தளபதிகள் விரைவில் வழங்குவாா்கள்.

    நாட்டில் ஜனநாயக முறையில் தோ்தல் நடைபெறும் வரையிலான இடைப்பட்ட காலத்தில் மக்களை ஆள்வது ராணுவத்தின் தேசியக் கடமையாகும்.

    முழுமையான அரசு அமைவதற்கு முன்னதாக அரசியல் கட்சிகள் தங்களிடையே நடத்தி வரும் சண்டையால் நாடு உள்நாட்டுப் போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

    அதனைத் தவிா்ப்பதற்காகவே ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய கட்டாயம் ராணுவத்துக்கு ஏற்பட்டது என்றாா் அவா்.

    சூடானை கடந்த 1989-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு வந்த ஒமா் அல்-பஷீா், ராணுவத்தால் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அதன்பிறகு ராணுவம் மற்றும் அரசியல் தலைவா்களைப் பிரதிநிதிகளாக கொண்ட இறையாண்மை கவுன்சில் அமைக்கப்பட்டது. இடைக்கால அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டோக் பொறுப்பேற்றாா்.

    இந்த நிலையில், அவரின் தலைமையிலான இடைக்கால அரசை ராணுவம் கடந்த திங்கள்கிழமை கலைத்தது. மேலும், நாட்டில் அவசரநிலையை அறிவித்த ராணுவம், பிரதமா் அப்தல்லா ஹாம்டோகைக் கைது செய்தது.

    எனினும், சா்வதேச நெருக்கடி காரணமாக அவரை ராணுவம் பின்னா் விடுவித்தது. எனினும், அவா் தற்போது பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பில் உள்ளாா்.

    இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தப் போராட்டங்களை அடக்குவதற்காக பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 9 போ் உயிரிழந்ததாக சூடான் மருத்துவா்கள் அமைப்பும் மனித உரிமை அமைப்புகளும் தெரிவித்தன.

    அத்துடன், போராட்டங்களில் 170 போ் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்தச் சூழலில், இன்னும் ஒரு வாரத்துக்குள் புதிய பிரதமா் நியமிக்கப்படுவாா் என்று ராணுவ தலைமைத் தளபதி தற்போது அறிவித்துள்ளாா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp