கோவாக்ஸின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவதில் இழுபறி; விளக்கம் அளித்த உலக சுகாதார அமைப்பு

கோவாக்ஸின் தடுப்பூசியை தயார் செய்த பாரத் பயோடெக் நிறுவனம், தடுப்பூசியின் திறன் குறித்த ஆவணங்களை உலக சுகாதார அமைப்பிடம் ஏப்ரல் 19ஆம் தேதி சமர்ப்பித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவாக்ஸின் தடுப்பூசி குறித்த தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் நிபுணர் குழுவிடம் தொடர்ந்து விரைவாக அளித்துவருவதாக உலக சுகாதார அமைப்பின் உயர்மட்ட அலுவலர் தெரிவித்துள்ளார். அடுத்த வாரத்தில், தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க உலக சுகாதார அமைப்பிடம் நிபுணர் குழு பரிந்துரைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உயர் தரமான தடுப்பூசிகளை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தை உலக சுகாதார அமைப்பு நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவசர கால ஒப்புதலை பெற, பாரத் பயோடெக் நிறுவனம், தடுப்பூசியின் திறன் குறித்த ஆவணங்களை உலக சுகாதார அமைப்பிடம் ஏப்ரல் 19ஆம் தேதி சமர்ப்பித்தது.

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனை குழு செவ்வாய்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்தியது. அப்போது, அவசர கால அனுமதி பெறுவதற்கான இறுதி மதிப்பாய்வை மேற்கொள்ள தடுப்பூசி குறித்த கூடுகள் விவரங்களை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் ஆலோசனை குழு கேட்டுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் உதவி இயக்குநர் மருத்துவர் மரியாங்கலா சிமாவோ கலந்து கொண்டார். சீன தடுப்பூசிகளான சினோபார்ம், சினோவாக் ஆகியவை போதுமான தரவுகளை அளிக்காதபோதிலும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், கோவாக்ஸின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது ஏன் தாமதமாகிறது என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், "பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்களை தொடர்ந்து விரைவாக அளித்துவருகிறது. இறுதி கட்ட தரவுகளை, அக்டோபர் 18ஆம் தேதி அளித்தனர். உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, தடுப்பூசி குறித்த கூடுகள் விவரங்களை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் ஆலோசனை குழு கேட்டுள்ளது. நவம்பர் 2ஆம் தேதி ஆலோசனை குழு கூட்டம் மீண்டும் கூடவுள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com