
நேபாளத்திற்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்கிய இந்தியா
நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.
நேபாளத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 50 பேர் வரை படுகாயமடைந்தனர்.
இதையும் படிக்க | கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தின் 2 மாகாணங்களில் உள்ள பர்சா, பாரா, ரவுதாஹத், சர்லாஹி, மஹோட்டரி மற்றும் தனுஷா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்திய அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,509 பேருக்கு கரோனா; 20 பேர் பலி
பர்சா மாவட்டத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற விழாவில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளக் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் வழங்கினர்.