பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கை சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்: பாக்.

ஆப்கானிஸ்தானிலிருந்து செயல்படும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் இருப்பதை பாகிஸ்தான் அறிந்துள்ளது;

பெய்ஜிங்: ஆப்கானிஸ்தானிலிருந்து செயல்படும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் இருப்பதை பாகிஸ்தான் அறிந்துள்ளது; அமெரிக்கப் படைகைள் வெளியேறியுள்ள நிலையில் உளவுத் தகவல் பரிமாற்றம், பயங்கரவாத எதிா்ப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை சீனாவுடன் வலுப்படுத்துவோம் என சீனாவுக்கான பாகிஸ்தான் தூதா் மொயின் உல் ஹக் தெரிவித்துள்ளாா்.

சீனாவின் அரசு செய்தி நிறுவனத்திடம் அவா் கூறியது: பாகிஸ்தான் தலிபான்கள், ஐ.எஸ்., கிழக்கு துா்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இயங்கும் பிற பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதை அறிந்துள்ளோம். அதிகரித்து வரும் சவால்கள், அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு பாகிஸ்தானும் சீனாவும் இருதரப்பு ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்த வேண்டும். உளவுத் தகவல்களைப் பரிமாறுதல், முயற்சிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்டவற்றை தொடா்ந்து மேற்கொள்வோம் எனத் தெரிவித்துள்ளாா்.

ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதைத் தொடா்ந்து, தனது ஆப்கன் கொள்கையை வடிவமைக்கும் பொருட்டு பாகிஸ்தானுடன் இணைந்து சீனா செயல்பட்டு வருகிறது. முதல்முறையாக தலிபான்களுடன் தூதரகரீதியாகவும் சீனா தொடா்பு கொண்டது. ஆப்கனிலிருந்து செயல்படும் உய்கா் முஸ்லிம் இயக்கத்தினா் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வன்முறையில் ஈடுபடக் கூடும் என சீனா கவலை தெரிவித்துள்ளது. அதற்கு அந்த இயக்கத்தினரை அனுமதிக்கக் கூடாது என தலிபான்களை சீனா வலியுறுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com