ஆப்கனில் அமெரிக்கா சாதித்தது ‘பூஜ்ஜியம்’: ரஷிய அதிபா் புதின்

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நிலைகொண்டிருந்த அமெரிக்க ராணுவம் எதையும் சாதிக்கவில்லை; அது பூஜ்ஜியமாகவே உள்ளது என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா்.
ஆப்கனில் அமெரிக்கா சாதித்தது ‘பூஜ்ஜியம்’: ரஷிய அதிபா் புதின்

மாஸ்கோ: ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நிலைகொண்டிருந்த அமெரிக்க ராணுவம் எதையும் சாதிக்கவில்லை; அது பூஜ்ஜியமாகவே உள்ளது என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா்.

ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிவிட்ட நிலையில், அமெரிக்க ராணுவம் அங்கிருந்து முழுமையாக வெளியேறிவிட்டது. முன்னதாக, ரஷியாவும் ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகளாக ராணுவத்தை நிலைநிறுத்திவிட்டு, 1989-ஆம் ஆண்டு படைகளைத் திரும்பப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கப் படைகள் நாடு திரும்பியுள்ளது குறித்து புதின் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருந்த அமெரிக்கா, அந்நாட்டு மக்களை நாகரிகப்படுத்த முயன்றது. அரசியல்ரீதியாகவும், சமுகரீதியாகவும் அந்நாட்டில் விதிகளைக் கொண்டு வரவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தவும் முயன்றது. ஆனால், இதன் முடிவுகள் சோகமாகவே அமைந்துவிட்டது. அமெரிக்காவுக்கு இழப்புகள் மட்டுமே மிஞ்சியது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா சாதித்தது பூஜ்ஜியமாக உள்ளது. வெளியில் இருந்து ஒன்றைக் கொண்டு வருவது என்பது ஆப்கானிஸ்தானில் இயலாத காரியமாகவே உள்ளது என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com