ஆப்கனிலிருந்து கிளம்பிய முதல் சர்வதேச விமானம்!

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஆப்கனிலிருந்து முதல் முறையாக சர்வதேச விமானம் வியாழக்கிழமை கிளம்பியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஆப்கனிலிருந்து முதல் முறையாக சர்வதேச விமானம் வியாழக்கிழமை கிளம்பியுள்ளது.

அமெரிக்க படைகள் பின் வாங்கப்பட்டதையடுத்து காபூல் விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமெரிக்க ராணுவம் முழுவதும் ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு நாடு திரும்பியது.

இதையடுத்து, தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது. அதன் பின்னர், கத்தார் அரசின் உதவியுடன் விமானங்களை இயக்கும் பணிகளை தலிபான் அரசு முடுக்கிவிட்டது. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து கத்தாருக்கு முதல் சர்வதேச விமானம் இன்று கிளம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தில் அமெரிக்கர்கள் உள்பட 200 பேர் பயணம் செய்தனர்.

சர்வதேச விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், எதிர்வரும் நாள்களில் ஆப்கனில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை சர்வதேச நாடுகள் மீட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com