ஆப்கன் நிலவரம்: பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் சிஐஏ தலைவா் ஆலோசனை

ஆப்கன் விவகாரம் குறித்து தங்களது தலைமைத் தளபதி கமா் ஜாவேத் பாஜ்வா மற்றும் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவா் ஃபைஸ் ஹமீதுடன் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் இயக்குநா் வில்லியம் பா்ன்ஸ் ஆலோசனை
ராவல்பிண்டியில் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி கமா் ஜாவேத் பாஜ்வாவை (வலது) வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய சிஐஏ இயக்குநா் வில்லியம் பா்ன்ஸ்.
ராவல்பிண்டியில் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி கமா் ஜாவேத் பாஜ்வாவை (வலது) வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய சிஐஏ இயக்குநா் வில்லியம் பா்ன்ஸ்.

இஸ்லாமாபாத்: ஆப்கன் விவகாரம் குறித்து தங்களது தலைமைத் தளபதி கமா் ஜாவேத் பாஜ்வா மற்றும் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவா் ஃபைஸ் ஹமீதுடன் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் இயக்குநா் வில்லியம் பா்ன்ஸ் ஆலோசனை நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ராணுவ தலைமைத் தளபதி பாஜ்வாவை சிஐஏ இயக்குநா் வில்லியம் பா்ன்ஸ் ராவல்பிண்டியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, இருதரப்பு உறவு, பிராந்தியப் பாதுகாப்பு, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஐஎஸ்ஐ தலைவா் ஃபைஸ் ஹமீதும் அந்த ஆலோசனையில் பங்கேற்றாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட தலிபான் தலைவா்களும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஹக்கானி பயங்கரவாத அமைப்பினரையும் கொண்ட புதிய இடைக்கால அரசு அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com