சிங்கப்பூரில் கரோனா அதிகரிப்பு

சிங்கப்பூரில் 450 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சிங்கப்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இருப்பினும், பெருந்தொற்றின் தொடக்க காலத்தில் இருந்தது போல் அல்லாமல் பரவலின் தீவிரத்தன்மை குறைவாக உள்ளது. இதையடுத்து, கட்டுப்பாடுகள் மெதுவாக திரும்பபெறப்பட்டுவருகிறது. 

கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கடுமையான ஊரடங்குகள் அமல்படுத்தியபோது இருந்த கரோனா எண்ணிக்கையை தாண்டி பரவல் அதிகரித்துவரும் நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது.

முன்பாக, பரவல் அதிகரித்தபோது, உடற்பயிற்சி கூடங்கள், உணவகங்கள் ஆகிய மூடப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், சிங்கப்பூரில் 450 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது. குறிப்பாக, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே தடுப்பூசி செலுத்தப்படுவோரின் விகிதம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் ஏழாம் இடத்தில் உள்ளது. இதன் காரணமாக, அங்கு இறப்பு எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்தது. ஆனால், பரவல் தீவிரமாக மாறியுள்ளதால் வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com