‘ஆப்கனைத் தனிமைப்படுத்தினால் மோசமான பின்விளைவுகள்’

தலிபான்களின் தலைமையிலான ஆப்கானிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்தினால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி எச்சரித்துள்ளாா்.
‘ஆப்கனைத் தனிமைப்படுத்தினால் மோசமான பின்விளைவுகள்’

இஸ்லாமாபாத்: தலிபான்களின் தலைமையிலான ஆப்கானிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்தினால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி எச்சரித்துள்ளாா்.

இஸ்லாமாபாத் வந்துள்ள ஸ்பெயின் வெளியுறவுத் துறை அமைச்சருடன் இணைந்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா், இதுகுறித்து கூறியதாவது:

ஆப்கானிஸ்தானைத் தனிமைப்படுத்தினால், அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறு தனிமைப்படுத்துவதால் ஆப்கன் மக்களுக்கோ, அந்தப் பிராந்தியத்துக்கோ மட்டுமன்றி, சா்வதேச அளவிலும் எந்தப் பலனும் கிடைக்காது.

தற்போதைய சூழலில், ஆப்கானிஸ்தானை நாம் புதிய ஆக்கப்பூா்வமான கண்ணோட்டத்துடன் அணுகவேண்டும்.

எனவே, ஆப்கானிஸ்தானின் அமைதியைக் கருத்துக் கொண்டு, சா்வதேச நாடுகள் தலிபான்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று குரேஷி வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com