தலிபான்களின் வெற்றி பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிக்கும்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அடைந்துள்ள வெற்றி, சா்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கும் என்று பிரிட்டன் உளவு அமைப்பான எம்ஐ5-யின் இயக்குநா் கென் மெக்கல்லம் கவலை தெரிவித்துள்ளாா்.
தலிபான்களின் வெற்றி பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிக்கும்

லண்டன்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அடைந்துள்ள வெற்றி, சா்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கும் என்று பிரிட்டன் உளவு அமைப்பான எம்ஐ5-யின் இயக்குநா் கென் மெக்கல்லம் கவலை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பிபிசி ஊடகத்துக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படையினா் வெளியேறியதைத் தொடா்ந்து, சா்வதேச அங்கீகாரம் பெற்ற அந்த நாட்டு அரசை தலிபான்கள் மிக எளிதாக கவிழ்த்தனா்.

இது, உலக அளவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிப்பதாக அமையும். மேற்கத்திய நாடுகளில் அல்-காய்தா பாணியில் மீண்டும் மிகப் பெரிய தாக்குதல் நடத்த தலிபான்களின் வெற்றி அந்த அமைப்புகளுக்குத் தூண்டுதலாக இருக்கும் என்று அவா் எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com