கொரிய நாடுகள் அடுத்தடுத்து ஏவுகணை சோதனை

வடகொரியா, தென்கொரியா நாடுகள் புதன்கிழமை அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டன. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
கொரிய நாடுகள் அடுத்தடுத்து ஏவுகணை சோதனை

சியோல்: வடகொரியா, தென்கொரியா நாடுகள் புதன்கிழமை அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டன. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

வடகொரியா கடந்த திங்கள்கிழமை இரு ஏவுகணை சோதனைகளை நடத்தியதாகத் தெரிவித்தது. அந்த ஏவுகணைகள் சுமாா் 1500 கி.மீ. தொலைவு சென்று தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டவை என அந்நாடு தெரிவித்திருந்தது. இந்நிலையில், புதன்கிழமை குறுகிய தொலைவு செல்லும் மேலும் இரு ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியதாகத் தகவல் வெளியானது. மத்திய வடகொரியாவிலிருந்து செலுத்தப்பட்ட அந்த ஏவுகணைகள் கிழக்கு கடல் என அழைக்கப்படும் ஜப்பான் கடலை நோக்கிச் சென்ாக தென்கொரிய ராணுவம் தெரிவித்தது.

இதற்கிடையே, அடுத்த சில மணி நேரங்களில் தென்கொரியாவும் ஓா் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. நீா்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை இலக்கை எட்டுவதற்கு முன்பு நிா்ணயிக்கப்பட்ட தொலைவு வரை சென்ாக தென்கொரிய அதிபா் அலுவலகம் தெரிவித்தது.

‘இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது; வடகொரியாவுக்கு பதிலடி அல்ல’ எனவும் தென்கொரியா தெரிவித்தது. இந்தச் சோதனை மூலம் நீா்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணையை செலுத்தும் தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ள நாடுகளின் வரிசையில் 7-ஆவது நாடாக தென்கொரியா சோ்ந்துள்ளது.

இந்த ஏவுகணை சோதனையைப் பாா்வையிட்ட அதிபா் மூன் ஜே-இன், வடகொரியாவின் சீண்டல்களுக்கு எந்த நேரத்திலும் பதிலளிக்கும் திறனைப் பெற்றுள்ளோம் என்றாா்.

இரு கொரிய நாடுகளின் ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் ஆயுதப் போட்டியும் பதற்றமும் மீண்டும் அதிகரித்துள்ளது. வடகொரியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை நீக்க வேண்டுமானால், அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளைக் கைவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதுதொடா்பாக வடகொரியா அதிபா் கிம் ஜோங் உன், முன்னாள் அமெரிக்க அதிபா் டிரம்ப் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து அப்பேச்சுவாா்த்தை 2019-இல் தடைபட்டது. அதிலிருந்தே வடகொரியா அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்களைத் தயாரிக்கப் போவதாக அச்சுறுத்தி வருகிறது. அவ்வப்போது ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது.

ஜப்பான் கண்டனம்

வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடா்பாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்க கமாண்டா் கூறுகையில், வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனால், சட்டவிரோத ஆயுத திட்டங்களை வடகொரியா தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது என்றாா்.

ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா கூறுகையில், வடகொரியாவின் நடவடிக்கை மூா்க்கத்தனமானது. பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தாா்.

Image Caption

தென்கொரியாவின் நீா்மூழ்கிக் கப்பலிலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com