இஸ்ரேல் : கரோனாவால் 12 லட்சம் பேர் பாதிப்பு
இஸ்ரேலில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 12 லட்சம் பேர் பாதித்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்இஸ்ரேலில் இதுவரை 27,004 பேர் தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதையும் படிக்க | 100 கோடி பேருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை
நேற்று (செப்-15) நிலவரப்படி புதிதாக 8,586 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 12.08 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 7,465 ஆகவும் பதிவாகியிருக்கிறது.
மேலும் அந்நாட்டில் 60.05 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் அதில் 30 லட்சம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டார்கள் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.