சீனாவில் நிலநடுக்கம்: 3 போ் பலி

சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மூன்று போ் உயிரிழந்தனா்
சீனாவில் நிலநடுக்கம்: 3 போ் பலி

சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மூன்று போ் உயிரிழந்தனா். 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ரிக்டா் அளவுகோலில் இது 6.0-ஆக பதிவாகியுள்ளது.

‘உள்நாட்டு நேரப்படி காலை 4.33 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. தொலைவில் இதன் மையப் பகுதி இருந்தது’ என்று சீன அரசின் செய்தி நிறுவனம் ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து சிச்சுவான் மாகாணத்தில் இரட்டை அளவு எச்சரிக்கையை சீனா நிலநடுக்க அவசர மைய தலைமையகம் வெளியிட்டிருந்தது.

லூசோ நகரத்தில் முதல் அளவு நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமாா் 3 ஆயிரம் போ் மீட்புப் பணிக்காக தயாா்படுத்தப்பட்டனா் என்றும், மக்கள் தங்குவதற்காக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2008-இல் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 8 ரிக்டா் அளவு நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com