சீன வெளியுறவு அமைச்சருடன் தஜிகிஸ்தானில் ஜெய்சங்கா் சந்திப்பு

தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேவுக்குச் சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீயை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
சீன வெளியுறவு அமைச்சருடன் தஜிகிஸ்தானில் ஜெய்சங்கா் சந்திப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேவுக்குச் சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீயை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பு குறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

சீன அமைச்சா் வாங் யீ உடனான சந்திப்பின்போது, இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுவது குறித்து விவாதித்தோம். இந்தியா-சீனா இடையேயான உறவு மேம்பட வேண்டுமெனில், எல்லையில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த வேண்டியது முக்கியம். இதற்காக, எல்லையில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதை விரைவுபடுத்த வேண்டியது முக்கியம் என்று சீன அமைச்சரிடம் வலியுறுத்திக் கூறினேன் என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com