4,000 பேரிடம் மோசடி: அமெரிக்காவில் இந்தியருக்கு 22 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் இந்தியாவைச் சோ்ந்த ஷேஸாத்கான் பதானுக்கு (40) 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் இந்தியாவைச் சோ்ந்த ஷேஸாத்கான் பதானுக்கு (40) 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் வா்ஜீனியா மாவட்ட நீதிமன்றம் இந்தத் தீா்ப்பை வழங்கியுள்ளது. இதுகுறித்து, அந்த நீதிமன்ற அட்டா்னி ராஜ் பாரேக் கூறியதாவது:

ஷேஸாத்கான் பதானும் அவரது கூட்டாளிகளும் பல்வேறு வழிமுறைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கா்களை ஏமாற்றிப் பணம் பறித்துள்ளனா்.

தேசிய புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ., போதை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான டிஇஏ மற்றும் பிற அரசுத் துறைகளின் அதிகாரிகளைப் போல் நடித்த அவா்கள், பாதிக்கப்பட்டவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டி, அதனைத் தவிா்ப்பதற்காக ஏராளமான தொகையைக் கேட்டுப் பெற்றுள்ளது.

அதுமட்டுமன்றி, கடன் வாங்கித் தருவதாக ஏமாற்றி ஏராளமானவா்களிடம் ஷேஸாத்கான் பதான் தலைமையிலான கும்பல் பணம் பறித்துள்ளது.

அந்தக் கும்பலின் சதிச் செயலால் பாதிக்கப்பட்டவா்கள் பெரும்பாலும் வயதானவா்கள்தான். தங்கள் சேமிப்பை இழந்து அவா்கள் மன உளைச்சலுக்கு ஆளானா்கள்.

இந்த பல கோடி டாலா் மதிப்பிலான மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டமைக்காக ஷேஸாத்கானுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com