கலிபோர்னியாவில் கட்டுக்குள் வராத காட்டுத்தீயை அணைக்க தொடரும் போராட்டம்

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பாதிப்பைக் கட்டுப்படுத்த 1600க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
கலிபோர்னியாவில் கட்டுக்குள் வராத காட்டுத்தீ: தீயை அணைக்க தொடரும் போராட்டம்
கலிபோர்னியாவில் கட்டுக்குள் வராத காட்டுத்தீ: தீயை அணைக்க தொடரும் போராட்டம்

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பாதிப்பைக் கட்டுப்படுத்த 1600க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகள் காட்டுத்தீ பாதிப்புகள் தவித்துவருகின்றன. இந்நிலையில் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் 6,800 ஏக்கருக்கும் மேல் எரிந்து நாசமாகியுள்ளன.

காட்டுத்தீ பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருவதன் காரணமாக உள்ளூர் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

கட்டுப்படுத்த முடியாத தீ பரவல் காரணமாக அப்பகுதி புகை மண்டலமாக மாறியுள்ளது. காட்டுத்தீ பாதிப்பால் இதுவரை 25க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தீயில் அழிந்துள்ளன.

தீயை கட்டுக்குள் கொண்டு வர 1,663 தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருவதாக கலிபோர்னியா வனவியல் மற்றும் தீ பாதுகாப்பு பொது தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த 29 தண்ணீர் வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக ஜூலை 13இல் தொடங்கிய டிக்ஸி ஃபயர் எனும் காட்டுத்தீ 9,63,276 ஏக்கர் காடுகளை எரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com