அமெரிக்கா: 7 லட்சத்தை கடந்த கரோனா பலி

அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்தது.
அமெரிக்கா: 7 லட்சத்தை கடந்த கரோனா பலி

அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 4,232 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 7,02,978-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 1,27,463 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இத்துடன், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,35,32,306-ஆக உயா்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com