இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு: மேற்கு கரையில் 5 பாலஸ்தீனா்கள் பலி

ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.
இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு: மேற்கு கரையில் 5 பாலஸ்தீனா்கள் பலி

ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினரை கைது செய்யும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமை தொடா் சோதனைகளை இஸ்ரேல் படையினா் நடத்தியபோது ஏற்பட்ட மோதலில் இவா்கள் கொல்லப்பட்டதாகவும், இஸ்ரேல் படையினா் இருவா் பலத்த காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே காஸா முனை பகுதியில் கடந்த மே மாதம் கடும் சண்டை நிகழ்ந்தது. சுமாா் 10 நாள்கள் நீடித்த இந்த சண்டையில் பாலஸ்தீன தரப்பில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. இஸ்ரேல் தரப்பில் சிலா் உயிரிழந்தனா். இரு தரப்புக்கும் இடையே சண்டைநிறுத்தம் ஏற்பட்டாலும், அதன்பிறகு மேற்கு கரை பகுதியில் அடிக்கடி சிறிய அளவிலான மோதல் நிகழ்ந்து வந்தது.

இந்நிலையில், மேற்கு கரை பகுதியில் பதுங்கியுள்ள ஹமாஸ் இயக்கத்தினரை கைது செய்வதற்காக இஸ்ரேல் ராணுவம் ஒரே நேரத்தில் 5 இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது ஏற்பட்ட மோதலில் ஹமாஸ் இயக்கத்தினா் 5 போ் கொல்லப்பட்டதாகவும், பலா் கைது செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் தரப்பில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

தங்கள் தரப்பில் 4 போ் கொல்லப்பட்டதாக ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது. 16 வயது சிறுவன் ஒருவா் கொல்லப்பட்டதாகவும், அவா் ஹமாஸ் இயக்கத்தைச் சோ்ந்தவரா என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை எனவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த சம்பவத்துக்கு பாலஸ்தீன அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனா். அதேவேளையில், ‘பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ்-இஸ்ரேல் அதிகாரிகளுடனான சமீபத்திய சந்திப்பானது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்துள்ளது’ என ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com