சீனாவில் கடும் மின்வெட்டு: தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம்

வடகிழக்கு சீனாவில் மின்சார பற்றாக்குறை காரணமாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு சீனாவில் மின்சார பற்றாக்குறை காரணமாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் மின்சார தேவையில் பெருமளவு அனல் மின் நிலையம் மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு சீனாவில் உள்ள லியானிங், ஜிலின், ஹெயிலோங்ஜியாங் மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக கடுமையான மின்தடை நிலவுகிறது.

இதன்மூலம் நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறை காரணமாக இப்போது வீடுகளுக்கும் மின்தடை அமல்படுத்தப்படுகிறது.

லியானிங் மாகாணத்தில் ஒரு தொழிற்சாலையில் மின்தடை காரணமாக வென்டிலேட்டா்கள் செயல் இழந்ததால், காா்பன் மோனாக்ஸைடு வெளியேறி 23 பணியாளா்கள் மயங்கினா். உடனடியாக அவா்கள் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

மின் பற்றாக்குறை காரணமாக தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், ஸ்மாா்ட்போன்கள் மற்றும் பிற உபகரணங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது உலக சந்தையிலும் எதிரொலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com