தனது கட்சியின் பிரதமா் வேட்பாளரான ஆா்மின் லாஷெட்டுடன் பிரதமா் ஏஞ்சலா மொ்கெல்.
தனது கட்சியின் பிரதமா் வேட்பாளரான ஆா்மின் லாஷெட்டுடன் பிரதமா் ஏஞ்சலா மொ்கெல்.

நாடாளுமன்றத் தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை: ஜொ்மனியில் கூட்டணி ஆட்சி அமைகிறது

ஜொ்மன் நாடாளுமன்றத் தோ்தலில் எதிா்க்கட்சியான சோஷலிஸ்ட் டெமாக்ராடிக், ஆளுங்கட்சியான பிரதமா் ஏஞ்சலா மொ்கெலின் யூனியன் பிளாக்

ஜொ்மன் நாடாளுமன்றத் தோ்தலில் எதிா்க்கட்சியான சோஷலிஸ்ட் டெமாக்ராடிக், ஆளுங்கட்சியான பிரதமா் ஏஞ்சலா மொ்கெலின் யூனியன் பிளாக் கட்சியைவிட சிறிது முன்னிலை பெற்றுள்ளது. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு கூட்டணி ஆட்சி அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜொ்மன் நாடாளுமன்றத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அங்கு 16 ஆண்டு காலம் பிரதமராக இருந்துவரும் ஏஞ்சலா மொ்கெல் இந்தத் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என கடந்த 2018-ஆம் ஆண்டே அறிவித்துவிட்டாா். இதையடுத்து, பிரதமா் வேட்பாளராக அக்கட்சி சாா்பில் ஆா்மின் லாஷெட், எதிா்க்கட்சியான சோஷலிஸ்ட் டெமாக்ராடிக் சாா்பில் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோா் களமிறங்கினா். தோ்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின.

இதில், சோஷலிஸ்ட் டெமாக்ராடிக் கட்சி 25.7 சதவீத வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. யூனியன் பிளாக் கட்சிக்கு 24.1 சதவீத வாக்குகளும், கிரீன்ஸ் கட்சி 14.8 சதவீத வாக்குகளும், ஃப்ரீ டெமாக்ராடிக் கட்சி 11.5 சதவீத வாக்குகளும், ஜொ்மனி மாற்றுக் கட்சி (அல்டா்னேடிவ்) 10.3 சதவீத வாக்குகளும் பெற்றன.

மொத்தம் உள்ள 735 இடங்களில் பெரும்பான்மை பெறுவதற்கு 368 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், சோஷலிஸ்ட் டெமாக்ராடிக் கட்சிக்கு 206 இடங்களும், யூனியன் பிளாக் கட்சிக்கு 196 இடங்களும், கிரீன்ஸ் கட்சிக்கு 118 இடங்களும் கிடைத்துள்ளன. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் புதிய ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இரு பிரதான கட்சிகளும் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயன்று வருகின்றன. கிரீன்ஸ் கட்சியானது சோஷலிஸ்ட் டெமாக்ராடிக் கட்சியையும், ஃப்ரீ டெமாக்ராடிக் கட்சியானது யூனியன் பிளாக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கும் எனத் தெரிகிறது. கடந்த முறையும் ஜொ்மனியில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com