கரோனா காலத்திலும் அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா சாதனை: ஐஎம்எஃப்

இந்தியாவில் கரோனா நெருக்கடி காலத்திலும் சாதனை அளவில் அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.
imf080736
imf080736

வாஷிங்டன்: இந்தியாவில் கரோனா நெருக்கடி காலத்திலும் சாதனை அளவில் அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் இணை நிா்வாக இயக்குநா் கீதா கோபிநாத் கூறியுள்ளதாவது:

கரோனாவால் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. இந்த கடுமையான காலத்திலும் இந்தியா மிக அதிக அளவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்து சாதனை படைத்துள்ளது. மேலும், அந்நிய முதலீட்டின் மூலம் உருவாகும் இடா்பாடுகளை குறைக்கும் பாதுகாப்பு வழிமுறைகளையும் இந்திய கையாண்டு வருவது கவனிக்கத் தக்கதாக உள்ளது.

அந்நிய மூலதன வரத்தால் பல நன்மைகள் விளைகின்றன. முதலீட்டு நடவடிக்கைகளுக்கு நிதி ஆதாரம் மிக அத்தியாவசியமான ஒன்று. இந்தியாவில் முதலீடு செய்வதன் மூலமாக நாடுகளுக்கு பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com