ஆப்கனில் பஞ்சத்தின் அபாயத்தில் 90 லட்சம் மக்கள்: ஐ.நா. கவலை

ஆப்கானிஸ்தானில் 90 லட்சம் மக்கள் பஞ்சத்தின் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 
ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்
ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்

ஆப்கானிஸ்தானில் 90 லட்சம் மக்கள் பஞ்சத்தின் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து அங்கு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு கல்வி, வேலைக்குச் செல்ல முடியாத சூழல், போரின் தாக்கம் ஆகியவற்றால் அங்கு பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. போர் முடிவுக்கு வந்தாலும் மனித உரிமை மீறல்கள் அங்கு அதிகமாக இருப்பதாக ஐ.நா. மற்றும் உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் சிதைந்துள்ளதாகவும் சுமார் 90 லட்சம் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 

இதனால் ஆப்கானிஸ்தானுக்கு ஐ.நா. உதவி செய்ய உலக நாடுகள் நிதியளிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com