நாட்டின் எதிர்காலத்தை ஊழல் சக்திகளால் தீர்மானிக்க முடியாது: இம்ரான் கான்

பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்த பரிந்துரைத்த இம்ரான் கான், தேசம் புதிய தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று கூறியுள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தை ஊழல் சக்திகளால் தீர்மானிக்க முடியாது: இம்ரான் கான்

பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்த பரிந்துரைத்த இம்ரான் கான், நாட்டின் எதிர்காலத்தை எந்த ஊழல் சக்திகளாலும் தீர்மானிக்க முடியாது, தேசம் புதிய தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று கூறியுள்ளார்.

பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயா்வு ஆகியவற்றுக்கு பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் எனக் குற்றம்சாட்டி அவா் மீது எதிா்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை கொண்டுவந்தன. இந்தத் தீா்மானத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை (ஏப்.3) வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் முக்கிய அமர்வு தொடங்கியதும், சட்ட அமைச்சர் ஃபவாத் சௌத்ரி பேசுகையில், வெளிநாட்டு சக்தியின் தூண்டுதலின் பேரில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்பது கடிதம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, எனவே இது பாகிஸ்தான் அரசியலமைப்பின் 5 ஆவது பிரிவுக்கு எதிரானது." இது ஒரு வெளிநாட்டு சக்தியின் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு பயனுள்ள நடவடிக்கையாகும்.

இது பாகிஸ்தான் அரசியலமைப்பின் 5 ஆவது பிரிவுக்கு எதிரானது என்று அவர் கூறியதுடன், நம்பிக்கையில்லா நடவடிக்கையின் சட்டபூர்வமான தன்மை குறித்து ஆராய்ந்து தீர்ப்பை வழங்குமாறு துணை சபாநாயகரை வலியுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து “நாட்டின் அரசியலமைப்பு மற்றும் விதிகளின்படி நம்பிக்கையில்லா தீர்மானம் இருக்க வேண்டும். இது சட்ட அமைச்சரால் சுட்டிக்காட்டப்படவில்லை மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த துணை சபாநாயகர் சூரி, இது பாகிஸ்தானின் அரசியலமைப்பு மற்றும் விதிகளுக்கு எதிரானது" என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த சூரி, அவையை ஒத்திவைத்தார்.

துணை சபாநாயகரின் தீர்ப்பையும், நாடாளுமன்றத்தை கலைக்கும் பிரதமரின் ஆலோசனையையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

இந்நிலையில், உரையாற்றிய இம்ரான் கான், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிராகரிக்கப்பட்டதற்கு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தவர், நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்தன் மூலம், "ஆட்சியை மாற்றும் முயற்சி மற்றும் வெளிநாட்டு சதியை நிராகரித்துவிட்டார்" என்று கூறினார். 

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு விரைவில் தேர்தல் நடத்த அதிபருக்கு பரிந்துரைத்த இம்ரான் கான், "தேசம் புதிய தேர்தலுக்கு தயாராக வேண்டும்", யார் தங்களை ஆட்சி செய்ய வேண்டும் என்பதை பாகிஸ்தான் மக்களே முடிவு செய்யட்டும், அரசை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு சதி தோல்வி அடைந்துள்ளதாகவும், உண்மையிலே நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு "வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல்" என்று கூறினார். 

நாட்டின் எதிர்காலம் என்ன என்பதை எந்த ஊழல் சக்திகளாலும் தீர்மானிக்க முடியாது என்று இம்ரான் கூறினார். 

பாகிஸ்தான் விடுதலை பெற்ற பின்னர் பதவியேற்ற எந்தப் பிரதமரும் இதுவரை ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக முடித்ததில்லை என்ற வரலாற்று செய்தியை இம்ரான் கானும் அதையே மீண்டும் நிருபித்துவிட்டார்.

‘மீண்டும் தோ்தல் நடத்துவதுதான் சிறந்த வழி’ என்று பிரதமா் இம்ரான் கான் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமர் இம்ரான்கான் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் அதிபர் ஆரீஃப் அல்வி பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாவும், 3 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்துக்கு தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com