நியூ யார்கில் ஒரு கணேஷ் கோயில் தெரு: நடிகர் பார்த்திபன் சொன்னது போல நடந்தது (விடியோ)

அமெரிக்காவில் வாழும் இந்து மக்கள் அனைவரும் குதூகலத்துடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது நியூ யார்க்கில்.
கணேஷ் கோயில் தெரு
கணேஷ் கோயில் தெரு


நியூ யார்க்: அமெரிக்காவில் வாழும் இந்து மக்கள் அனைவரும் குதூகலத்துடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது நியூ யார்க்கில்.

நியூ யார்க்கில் அமைந்துள்ள மிகப் பழமையான, புகழ்பெற்ற விநாயகர் ஆலயம் அமைந்திருக்கும் தெருவுக்கு 'கணேஷ் டெம்பிள் ஸ்டீரீட்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சரியாக 1977ஆம் ஆண்டில் வட அமெரிக்க ஸ்ரீ மகா வல்லப கணபதி தேவஸ்தானத்தின் இந்து கோயில் அமைப்பு சார்பில் மிகவும் புகழ்பெற்ற விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டது. வட அமெரிக்காவில் அமைக்கப்பட்ட முதல் மற்றும் மிகப் பழமையான ஆலயம் இதுவாகும்.

குயின்ஸ் கவுண்டியின் பிளஸ்ஸிங் பகுதியில் இந்த இந்து ஆலயம் அமைந்துள்ளது.

அமெரிக்காவில் அனைவருக்கும் மதச் சுதந்திரம் கிடைக்கவும், அடிமைத்தனத்துக்கு எதிராகவும் போராடிய ஜான் பௌனேவின் நினைவைப் போற்றும் வகையில், இந்த கோயில் அமைந்துள்ளது.

இந்த நிலையில், கோயில் அமைந்திருக்கும் இந்த தெருவுக்கு கூடுதலாக 'கணேஷ் டெம்பிள் ஸ்டீரீட்' என்று இணைப் பெயரிடுவதற்கு சனிக்கிழமையன்று ஒரு சிறப்பு நிகழ்ச்சி கோயிலில் நடைபெற்றது.

நியூ யார்குக்கான இந்திய தூதர், குயின்ஸ் மாகாணத் தலைவர், வர்த்தக துணை ஆணையர், நியூ யார்க் நகர மேயர் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், கணேஷ் கோயில் தெரு என்று புதிய பெயர்ப் பலகையும் திறந்து வைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com