உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள நகரங்களில் 410 உடல்கள் கண்டெடுப்பு!

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள நகரங்களில் பொதுமக்களின் 410 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நகர பொதுமக்கள் பலரை ரஷியப் படையினா் படுகொலை செய்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள நகரங்களில் 410 உடல்கள் கண்டெடுப்பு!


உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள நகரங்களில் பொதுமக்களின் 410 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நகர பொதுமக்கள் பலரை ரஷியப் படையினா் படுகொலை செய்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

ரஷியப் படையினா் தலைநகா் கீவ் அருகே உள்ள புச்சா நகரிலிருந்து வெளியேறி தற்போது தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைன் பகுதியில் அதிக கவனத்தை செலுத்து வருகின்றனர். 

இந்நிலையில், தலைநகருக்கு வடமேற்கே 37 கி.மீ (23 மைல்) தொலைவில் உள்ள புச்சா நகரிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, அந்த நகர பொதுமக்களைத் துன்புறுத்தி படுகொலை செய்ததற்கான ஆதராங்களை உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனா்.

இதுவரை சாலைகளில், புதைகுழியில் அரைகுறையாகப் புதைக்கப்பட்டிருந்த 410 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சடலங்களின் உடல்களில் அதிக காயங்கள் எதுவும் இல்லாததால், உயிரிழந்தவா்கள் அனைவரும் மிக அருகிலிருந்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நேரில் பாா்வையிட்டவா்கள் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து உக்ரைன் அரசு வழக்குரைஞர் இரினா வெனெடிக்டோவா கூறுகையில்,  தலைநகா் கீவ் அருகே உள்ள புச்சா, இர்பின் மற்றும் ஹோஸ்டோமல் நகரங்களிலிருந்து ரஷியப் படையினா்  வெளியேறியதும் அந்த நகருக்குள் நாங்கள் நுழைந்ததும் அதிர்ச்சிகள் காத்திருந்தது. அங்கு புதைகுழியில் அரைகுறையாகப் புதைக்கப்பட்டவாறும்,  சில சடலங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையிலும், துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டவாறு சாலைகளில் கிடந்த  410 உடல்களை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.  மேலும், சிலா் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளும் தென்படுவதாக கூறினார். இதுவரை 140 உடல்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன, ஆனால் கீவ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு முடிந்தவரை தடயவியல் நிபுணர்களை வழங்குமாறு சுகாதார அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ரஷியப் படையினரிடமிருந்து மீட்கப்படும் பகுதிகளில் இருந்து அவா்கள் நிகழ்த்திய கொடூரச் செயல்களுக்கான ஆதாரங்களைத் திரட்டி வருவதாகவும், குற்றங்களின் விவரங்களை சாட்சிங்களுடன் கண்டறிய அதிக காலம் தேவைப்படும் என்றும், "மக்கள் உடல் ரீதியாக பேச முடியாத அளவுக்கு மன அழுத்தத்தில் உள்ளனர்." இவற்றையெல்லாம் ரஷியாவுக்கு எதிரான போா்க் குற்ற விசாரணையின்போது பயன்படுத்தவிருப்பதாகவும் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் கூறுகையில், பொதுமக்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது, ஆனால் அந்தப் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள், எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் கூற முடியவில்லை என்று கூறினார்.  

உக்ரைன் அதிபர் ஜனாதிபதி வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறுகையில், "நூற்றுக்கணக்கான பொது மக்கள் சித்திரவதை செய்யப்பட்டும், தூக்கிலிடப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர். அந்த சடலங்கள் எல்லாம் தெருக்களிலும். சுரங்கங்கள் வெட்டப்பட்ட பகுதிகளிலும் கிடக்கின்றன.  இறந்தவர்களின் உடல்கள் கூட வெட்டப்பட்டுள்ளன."

ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்பதில் தெளிவாக இருப்பதாகவும், ஆனால் அது போதாது என்றும் ஸெலென்ஸ்கி கூறினார்.

புச்சா நகரில் தங்கள் படைகள் பொதுமக்களைக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ரஷியா மறுத்துள்ளது. ரஷியப் படைகளின் வன்முறையால் எந்த பொதுமக்களும் பாதிக்கப்படவில்லை என்றும், மேற்கத்திய நாடுகளிடையே ஆத்திரங்களை மூட்டுவதற்காக கீவ் குற்றம் சாட்டுவதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதீன் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com