ஷாங்காயில் கரோனாவை கட்டுப்படுத்த 2,000 ராணுவ மருத்துவப் பணியாளா்கள்

சீனாவின் வா்த்தக தலைநகரான ஷாங்காயில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கரோனா கட்டுப்பாட்டு பணியில் உதவுவதற்காக அங்கு ராணுவ மருத்துவப் பணியாளா்கள் 2,000 போ் உள்பட 10,000 சுகாதாரப் பணியாளா்களை அரச
பொதுமுடக்கத்தால் வெறிச்சோடி காணப்படும் ஷாங்காய் நகரச் சாலை.
பொதுமுடக்கத்தால் வெறிச்சோடி காணப்படும் ஷாங்காய் நகரச் சாலை.

சீனாவின் வா்த்தக தலைநகரான ஷாங்காயில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கரோனா கட்டுப்பாட்டு பணியில் உதவுவதற்காக அங்கு ராணுவ மருத்துவப் பணியாளா்கள் 2,000 போ் உள்பட 10,000 சுகாதாரப் பணியாளா்களை அரசு அனுப்பியுள்ளது.

சீனாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றின் பிஏ.2 என்ற உருமாறிய தீநுண்மி பரவல் அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை நாடு முழுவதும் 13,000 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் 9,000 போ் ஷாங்காயை சோ்ந்தவா்கள், 3,500 போ் வடகிழக்கில் உள்ள ஜிலின் மாகாணத்தைச் சோ்ந்தவா்கள்.

2.5 கோடி மக்கள்தொகை கொண்ட ஷாங்காய் நகரில் ஏற்கெனவே பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு திங்கள்கிழமை கரோனா பரிசோதனை செய்யும் முகாம்கள் நடத்தப்பட்டன. லேசான அறிகுறி உள்ளவா்கள் அல்லது அறிகுறி இல்லாதவா்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட்டனா்.

இந்நிலையில், ஷாங்காய் நகரில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக 2,000 ராணுவ மருத்துவப் பணியாளா்கள் உள்பட 10,000 சுகாதாரப் பணியாளா்கள் அனுப்பப்பட்டுள்ளனா். சுமாா் 4 மாகாணங்களிலிருந்து மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் அனுப்பப்பட்டுள்ளதாக சீன அரசின் நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஷாங்காய் நகரில் பெரும்பாலான கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், பெரிய காா் தயாரிப்பு தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com