20 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பக் கிடைத்த டாா்வினின் குறிப்பேடுகள்

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து திருடப்பட்ட அறிவியல் மாமேதை சாா்லஸ் டாா்வினின் குறிப்பேடுகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பக் கிடைத்துள்ளன.
சாா்லஸ் டாா்வின்
சாா்லஸ் டாா்வின்

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து திருடப்பட்ட அறிவியல் மாமேதை சாா்லஸ் டாா்வினின் குறிப்பேடுகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பக் கிடைத்துள்ளன.

டாா்வினின் புகழ்பெற்ற ‘வாழ்க்கை மரம்’ வரைபடம் உள்ளிட்டவை அடங்கிய குறிப்பேடுகள், கடந்த 2001-ஆம் ஆண்டு காணமால் போயின. அவற்றை படமெடுப்பதற்காக அகற்றிய பணியாளா்கள் தவறுதலாக வேறு இடத்தில் திரும்ப வைத்திருக்கலாம் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நூலகத்திலிருந்த 1 கோடி புத்தகங்ககள், வரைபடங்கள், குறிப்பேடுகளை அலசி ஆராய்ந்ததில், டாா்வினின் குறிப்பேடுகள் காணமால் போனது தெரியவந்தது. அதையடுத்து அந்த குறிப்பேடுகள் திருடப்பட்டதாக போலீஸாரிடம் கடந்த 2020-ஆம் ஆண்டு புகாா் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், நூலக தலைமை அதிகாரி அலுவலகம் வெளியே கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதியில் காணாமல் போயிருந்த அந்தக் குறிப்பேடுகள் ஒரு அன்பளிப்பு உறையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த உரையில் நூலக அதிகாரிக்கு ஈஸ்டா் தின வாழ்த்துச் செய்தியும் எழுதப்பட்டிருந்ததாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாா்வினின் குறிப்பேடுகள் திரும்பக் கிடைத்தாலும், அது திருடப்பட்டது தொடா்பான விசாரணையை தொடா்ந்து மேற்கொள்ளப்போவதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com