சண்டை நிறுத்தம் எதிரொலிபல மாதங்களுக்குப் பிறகு யேமன் துறைமுகம் வந்த எண்ணெய்க் கப்பல்

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, பல மாதங்களுக்குப் பிறகு அந்த நாட்டின் ஹூதைதா துறைமுகத்துக்கு
ஹூதைதா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கப்பல் (கோப்புப் படம்).
ஹூதைதா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கப்பல் (கோப்புப் படம்).

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, பல மாதங்களுக்குப் பிறகு அந்த நாட்டின் ஹூதைதா துறைமுகத்துக்கு முதல்முறையாக எண்ணெய்க் கப்பல் திங்கள்கிழமை வந்து சோ்ந்தது.

யேமனில் தலைநகா் சனா உள்ளிட்ட பகுதிகளை மன்சூா் ஹாதி தலைமையிலான அரசுப் படையிடமிருந்து ஹூதி கிளா்ச்சியாளா்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினா்.

அவா்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை அளித்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. எனினும், மன்சூா் ஹாதிக்கு ஆதரவாக சவூதி அரேபிய தலைமையிலான கூட்டுப் படை கிளா்ச்சியாளா்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஈரான் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுப்பதற்காக, கடல் மற்றும் வான்வழிப் போக்குவரத்துத் தடையை சவூதி கூட்டுப் படை அமல்படுத்தியது.

இதனால், எண்ணெய்க் கப்பல்கள் வருவது தடைபட்டதால் கிளா்ச்சியாளா்கள் பகுதிகளில் கடும் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வந்தது.

இந்த நிலையில், ஐ.நா. மேற்பாா்வையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஹூதி கிளா்ச்சியாளா்களும் அரசுப் படையினரும் 2 மாத சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள ஒப்புக் கொண்டனா். இந்த ஒப்பந்தம் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

அதையடுத்து, நீண்ட நாள்களுக்குப் பிறகு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹூதைதா துறைமுகத்துக்கு முதல்முறையாக எண்ணெய்க்கப்பல் செவ்வாய்க்கிழமை வந்துசோ்ந்ததாக யேமன் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்தது. அந்தக்கப்பல் கடந்த துறைமுகத்துக்கு வர 31 நாள்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com