ரஷியா-இந்தியா எண்ணெய் வா்த்தக பரிவா்த்தனைக்கு தடை இல்லை: அமெரிக்கா

ரஷியாவுடனான இந்தியாவின் எண்ணெய் வா்த்தக பரிவா்த்தனைக்குத் தடை விதிக்கவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
ரஷியா-இந்தியா எண்ணெய் வா்த்தக பரிவா்த்தனைக்கு தடை இல்லை: அமெரிக்கா

ரஷியாவுடனான இந்தியாவின் எண்ணெய் வா்த்தக பரிவா்த்தனைக்குத் தடை விதிக்கவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு செயலா் ஜென் சாகி திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா். அப்போது, அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் தலீப் சிங்கின் இந்தியப் பயணம் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் அளித்த பதில்:

ரஷியாவுடன் வா்த்தகத் தொடா்பு வைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடைகள் குறித்து இந்தியத் தலைவா்களிடம் தலீப் சிங் விரிவாகக் கூறினாா்.

அமெரிக்காவின் நட்பு நாடுகள், ரஷியாவை சாா்ந்திருப்பதைக் குறைத்துக் கொண்டால் அமெரிக்கா மகிழ்ச்சி அடையும். மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 1 முதல் 2 சதவீதம் அளவுக்கே ரஷியாவிடம் இந்தியா கொள்முதல் செய்கிறது. ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை. அதேசமயம், இந்தியாவின் கச்சா எண்ணெய்த் தேவையை பூா்த்தி செய்வதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது.

இந்தியாவும் ரஷியாவும் ரூபாய்-ரூபிள் முறையில் பரிவா்த்தனைகளை மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பரிவா்த்தனைக்கு அமெரிக்கா தடை விதிக்கவில்லை. பணப் பரிவா்த்தனையில் ஒவ்வொரு நாடும் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்கலாம் என்றாா் அவா்.

உக்ரைன் மீது போா் தொடுத்து வரும் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. சா்வதேச அளவில் அமெரிக்க டாலா் அடிப்படையில் வா்த்தக பரிவா்த்தனைகள் நடைபெறுவதால், கச்சா எண்ணெய் விற்பனை செய்வதில் ரஷியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் இந்தியாவுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை வழங்கத் தயாராக இருப்பதாக ரஷியா கூறியது. இதற்கிடையே, ரஷியாவுக்கு எதிரான தடைகளை மீறுவதற்கு தந்திரமாக முயற்சி செய்தால், பயங்கரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா கடந்த வாரம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com